‘றீமால்’ புயல் இன்று மாலை வலுவடையும் !

 

‘றீமால்’ புயல் இன்று மாலை வலுவடையும் !


மத்திய மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை அண்மித்த தெற்கு வங்காள விரிகுடா பகுதியில் நேற்று முன்தினம் தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலைகொண்டது.

இது நேற்றையதினம் (24) வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்காள விரிகுடா பகுதியில் புயலாக வலுப்பெற்றது.

இதற்கு ‘றீமால்’ என்று பெயர் சூட்டப்பட்டது. தற்போது குறித்த புயல் மத்திய கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டுள்ளது.

இந்நிலையில், றீமால் புயலானது வடக்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக இன்று மாலை வலுப்பெற உள்ளது. அதன் பின்னர், நாளை (26) நள்ளிரவு தீவிர புயலாக வங்காள விரிகுடா மற்றும் அதனை அண்மித்த மேற்கு வங்காள விரிகுடா கடற்கரையை கடக்கக்கூடும்.

கரையை கடக்கும் போது மணிக்கு 110-120 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களமும், இந்திய வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளன.

இதேவேளை இலங்கையைச் சூழவுள்ள கடற் பிராந்தியங்களில் நிலவும் கடும் சீற்றம் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளிலுள்ள கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் மிகவும் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்..

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !