கணவருக்கு விஷத்தை கொடுத்து கொன்ற குற்றச்சாட்டில் மனைவி கைது !

 

கணவருக்கு விஷத்தை கொடுத்து கொன்ற குற்றச்சாட்டில் மனைவி கைது !



பெலியத்த கொஸ்கஹகொட பகுதியில் மூன்று பிள்ளைகளின் தாயும் அவரது சகோதரரும் இணைந்து குறித்த பெண்ணின் கணவரை விஷத்தைக் கொடுத்துக் கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக பெலியத்த பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவர் கடந்த 20ஆம் திகதி வீட்டில் மது அருந்திய போது ஏற்பட்ட சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் பிரேதப் பரிசோதனையின் போது விஷம் அருந்தி உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்நிலையில் கைதான இருவரிடம் பொலிஸார் விசாரணை செய்த போது , கணவரின் குடிநீர் போத்தலில் தங்கம் பூசுவதற்குப் பயன்படுத்தப்படும் நச்சு இரசாயனமான பதார்த்தத்தைக் கலந்ததாகத் தெரியவந்துள்ளது. 

பெலியஅத்த கொஸ்கஹாகொட பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் சந்தேக நபர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) தங்காலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !