கோயில் உண்டியல் திருட்டு: ஒருவர் கைது !
கோயில் உண்டியல் திருட்டு: ஒருவர் கைது !
யாழ்ப்பாணம், ஆவரங்கால் சிவன் கோவிலில் உண்டியலை உடைத்து திருட்டில் ஈடுபட்ட ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (26) இரவு கைது செய்யப்பட்டதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
குறித்த ஆலயத்தில் திருடிவிட்டு மற்றொரு ஆலயத்தில் திருட முற்பட்ட போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து திருடப்பட்ட பணமும் சில பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பிலான விசாரணைகளுக்கு பின்னர் சந்தேகநபரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர் .
Comments
Post a Comment