1700 ரூபா நாள் சம்பளத்தை வழங்குமாறு கோரி தோட்டத் தொழிலாளர்கள் அமைதி வழிப் போராட்டம் !


தோட்ட தொழிலாளர்களின் 1700 ரூபா நாள் சம்பளத்தை தோட்டக் கம்பெனிகளை உடனடியாக வழங்குமாறு கோரி பசறை எல்டப் கிகிரிவத்தை தோட்ட தொழிலாளர்கள் அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

எல்டப் கிகிரிவத்தை தோட்ட காரியாலயத்திற்கு முன்பாக இன்று திங்கட்கிழமை (24) காலை 9. 30 மணியளவில் அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டனர் . 

அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு அமைய தங்களுக்கு உடனடியாக 1700 ரூபாய் சம்பளத்தை வழங்குமாறு அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்ட தோட்ட தொழிலாளர்கள் வேணடு்கோள் விடுத்தனர்.

இவ் அமைதி வழி போராட்டம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர் அசோக் குமார் தலைமையில் இடம்பெற்றதோடு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மாநில இயக்குனர் கனகராஜ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காரியாலய உத்தியோகத்தர்களும் அவ்விடத்துக்கு வருகை தந்ததோடு தோட்ட உயர் அதிகாரியுடன் பேச்சு வார்த்தையிலும் ஈடுப்பட்டனர்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !