இலங்கை - சீனா விமான சேவை மீள ஆரம்பம் !

 

இலங்கை - சீனா விமான சேவை மீள ஆரம்பம் !


சீனாவின் சோங்கிங்கை (Chongqing Airline) தளமாகக் கொண்டு செயல்படும் சோங்கிங் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், கொழும்புக்கும் சீனாவுக்குமிடையிலான நேரடிவிமான சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது.

சீனாவின் சோங்கிங்லிருந்து 78 பயணிகளுடன் இந்த நிறுவனத்தின் OQ2393 இலக்க விமானம் நேற்று முன்தினம் (24) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச நிலையத்தை வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து விமானத்திற்கான சம்பிரதாய வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றதாக ஏயார்போர்ட் என்ட் எவியேஷன் செர்வீசஸ் (Airport and Aviation Services (Sri Lanka) (Pvt.) Limited) நிறுவனம் தெரிவித்தது. சோங்கிங் மற்றும் கொழும்புக்குமிடையே வாரத்தில் மூன்று விமான சேவைகள் இடம்பெறவுள்ளதாக இந்த விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !