ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட பலருக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு !
ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட பலருக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு !
இன்று (26) பிற்பகல் நடத்தப்படவிருந்த ஆசிரியர் - அதிபர் போராட்டத்தில் ஈடுபட உள்ள பலருக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இதன்படி, ஜோசப் ஸ்டார்லிங், மஹிந்த ஜயசிங்க, அமில சந்தருவன், வாஸ் குணவர்தன, வணக்கத்திற்குரிய உலப்பனே சுமங்கல தேரர், மயூர சேனாநாயக்க, வணக்கத்துக்குரிய யல்வல பன்னசேகர தேரர், புஞ்சிஹெட்டி, மொஹான் பராக்கிரம வீரசிங்க மற்றும் இவர்களுடனான உறுப்பினர்களுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று (26) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கொழும்பின் பிரதான வீதிகளுக்கு தடையை ஏற்படுத்த வேண்டாம் எனவும், நிதியமைச்சு, ஜனாதிபதி செயலகம், மத்திய வங்கி, ஜனாதிபதி மாளிகை ஆகியவற்றுக்குள் அத்துமீறி நுழையவும் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொறுப்பான ஒரு அரசு அதிகாரியுடன் சட்டப்பூர்வமாக பெற்ற அனுமதியின் அடிப்படையில் நுழைவதற்கு எந்த தடையும் இல்லை என்றும் நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment