கல்முனையிலிருந்து கதிர்காமம், உகந்தைக்கு இ.போ.ச. பஸ் சேவை !
கல்முனையிலிருந்து கதிர்காமம், உகந்தைக்கு இ.போ.ச. பஸ் சேவை !
கதிர்காமம் ஆடிவேல் விழாவையிட்டு தினமும் கல்முனைக்கும் கதிர்காமம் மற்றும் உகந்தைக்கும் இடையில் கிரமமாக இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக, கல்முனை சாலை முகாமையாளர் வி.ஜௌபர் தெரிவித்தார்.
எதிர்வரும் ஜூலை மாதம் 2ஆம் திகதி முதல் உகந்தைக்கும், 6ஆம் திகதி முதல் கதிர்காமத்துக்கும் இ.போ.ச. பஸ்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாகவும் பயணிகள் முன்கூட்டி ஆசன பதிவை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
மேலும் இ.போ.ச. பஸ் வண்டியை முன்கூட்டி குழுவாக பதிவு செய்தால், தனியான பஸ் சேவையில் ஈடுபடுத்தப்படுமெனவும், அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் காலை 6.30 மணிக்கு கல்முனை பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து கதிர்காமம் மற்றும் உகந்தைக்கு இ.போ.ச. பஸ்கள் சேவையில் ஈடுபடவுள்ளன.
இதேவேளை உகந்தை மற்றும் கதிர்காமத்திலிருந்து கல்முனைக்கு மாலை 4.00 மணிக்கு பஸ் சேவைகள் இடம்பெறும். நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து பஸ் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
தீர்த்த உற்சவத்தில் கலந்துகொள்ளும் அடியார்களை அழைத்து வர கூடுதலான பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுமெனவும், அவர் கூறினார்.
அடியார்களின் நலன் கருதி இலங்கை போக்குவரத்து சபை பஸ் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் கல்முனை பஸ் நிலையத்திலிருந்து உகந்தைக்கான ஒரு வழித்தட பஸ் கட்டணம் 650 ரூபாவாகும். கதிர்காமத்துக்கான ஒரு வழித்தட பஸ் கட்டணம் 950 ரூபாவை அறவிடவுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
Comments
Post a Comment