பள்ளத்தில் பாய்ந்து கார் விபத்து: இருவர் காயம் !

 

பள்ளத்தில் பாய்ந்து கார் விபத்து: இருவர் காயம் !


நோர்வூட்டில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததில் அதில் பயணித்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.

அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் - நோர்வூட் பிரதான வீதியில் நோர்வூட் - தியசிறிகம பிரதேசத்தில் நேற்று (29) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

புதிதாக சாரதி அனுமதிப்பத்திரம் பெற்ற பெண் ஒருவரே இந்த காரை ஓட்டிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !