கனடா செல்லவிருந்த இளைஞன் சடலமாக மீட்பு ! 20 இலட்சம் பணத்துடன் சென்றபோது ஏற்பட்டுள்ள சம்பவம்

 

கனடா செல்லவிருந்த இளைஞன் சடலமாக மீட்பு ! 20 இலட்சம் பணத்துடன் சென்றபோது ஏற்பட்டுள்ள சம்பவம்


முல்லைத்தீவு மல்லாவி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனொருவன் வெளிநாடு செல்ல காத்திருந்த நிலையில் வவுனிக்குளத்திலிருந்து நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  

முல்லைத்தீவு யோகபுரம் மல்லாவி பகுதியைச் சேர்ந்த ஆனந்தரசா ஜீவன் (வயது 27) என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

நேற்றுமுன்தினம் (29) பிற்பகல் ரூ.20 இலட்சம் பணத்துடன் யோகபுரத்திலிருந்து பாண்டியன் குளத்துக்கு சென்ற இளைஞன் இரவு 8.40 வரை நண்பர்களுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளதாக தெரியவருகின்றது. பின்னர் அவரது தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டதை தொடர்ந்து நண்பர்கள் தேடி பார்த்த போது அவனை காணவில்லை.

இந்நிலையில் நேற்று அதிகாலை 3.00 மணியளவில் பாண்டியன்குளம் குளக்கரையில் மோட்டார் சைக்கிள் காணப்பட்டுள்ளது. தொடர்ந்து வவுனிக்குளத்தின் மூன்றாவது நீர் சுருங்கையில் (நீர் கொட்டு) சடலம் இனங்காணப்பட்டு பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021