யுக்திய நடவடிக்கை ; போதைப்பொருள் தொடர்பில் 728 பேர் கைது !

 

யுக்திய நடவடிக்கை ; போதைப்பொருள் தொடர்பில் 728 பேர் கைது !


நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின்போது போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் 718 ஆண்களும் 10 பெண்களும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 34 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் 81 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். 

சந்தேக நபர்களிடமிருந்து 147 கிராம் 507 மில்லிகிராம் ஹெரோயின், 246 கிராம் 261 மில்லிகிராம் ஐஸ், 29,709 கிராம் 06 மில்லிகிராம் கஞ்சா, 5,204 கஞ்சா செடிகள் மற்றும் 134 போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021