தபால் மூல வாக்களிப்பு குறித்து பரவும் போலித் தகவல் : தெளிவுபடுத்தியுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு !
தபால் மூல வாக்களிப்பு குறித்து பரவும் போலித் தகவல் : தெளிவுபடுத்தியுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு !
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பொதுமக்களின் இதர தேவைகளுக்காக, தபால் மூலம் வாக்களிக்கவுள்ளோர்களின் தேர்தல் வாக்காளர் பெயர் பட்டியல் தொடர்பான தகவல்கள் தேர்தல் ஆணைக்குழுவின் www.elections.gov.lkஎன்ற இணையத்தளத்தின் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்க முடியும் என சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் தகவல்கள் போலியானதாகும்.
எனவே, தபால் மூலம் வாக்களிக்கவுள்ளோர் தேர்தல் ஆணைக்குழுவினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள www.elections.gov.lk என்ற இணையத்தளத்தின் மூலம் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ தகவலின்படி, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னர் தங்களது விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டத்தின் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலக அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்.
Comments
Post a Comment