வான்வழி தாக்குதலில் ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் பலி ! யார் இவர் ? எவ்வளவு முக்கியமானவர்?

 

வான்வழி தாக்குதலில் ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் பலி ! யார் இவர் ? எவ்வளவு முக்கியமானவர்?

 


இரானின் அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சென்ற ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரான இஸ்மாயில் ஹனியே, அவரின் வீட்டில் வைத்து கொல்லப்பட்டார்.

வான்வழி தாக்குதல் மூலம் அவர் கொல்லப்பட்டதை ஹமாஸ் இயக்கம் உறுதி செய்துள்ளது. பாலத்தீனத்தின் பிரதமராகவும், ஹமாஸ் அமைப்பின் தலைவராகவும் பலரால் அறியப்பட்ட ஹனியே, அக்டோபர் 7ம் தேதிக்கு பிறகு காஸாவில் நடைபெற்று வரும் போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரானில் கொல்லப்பட்ட ஹனியே யார்? அவரின் அரசியல் வாழ்க்கையும் வளர்ச்சியும் எப்படி இருந்தது?

அகதிகள் முகாமில் பிறந்த ஹனியே

அபு அல்-அப்து என்ற புனைப்பெயர் கொண்ட இஸ்மாயில் அப்தெல் சலாம் ஹனியே, 1963ம் ஆண்டு பாலத்தீன அகதிகள் முகாமில் பிறந்தவர்.

1980களின் பிற்பாதியில் ஹமாஸ் இயக்கத்தின் முக்கியமான தலைவராக உருவெடுத்தார். 1989ம் ஆண்டு, இஸ்ரேலில் அவர் மூன்று ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்.

பிறகு 1992ம் ஆண்டு இதர ஹமாஸ் தலைவர்களுடன் இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடைப்பட்ட பகுதியில் மனிதர்கள் யாரும் இல்லாத பகுதிக்கு நாடு கடத்தப்பட்டார்.

இஸ்ரேலால் பலமுறை சிறையில் அடைக்கப்பட்ட இவர், ஒரு காலத்தில் 6 மாதங்களுக்கு தெற்கு லெபனானில் இருக்க நிர்பந்திக்கப்பட்டார்.

இவரை கொல்வதற்கான முயற்சிகளும் அவ்வபோது நடந்த வண்ணம் இருந்தன. 2003ம் ஆண்டு ஹமாஸ் நிறுவனருடன் சேர்த்து இவரையும் கொல்ல இஸ்ரேல் மேற்கொண்ட முயற்சியில் அவர் உயிர் தப்பினார்.

மூன்று ஆண்டுகள் கழித்து 2003ம் ஆண்டு அவர் பாலத்தீன அரசாங்கத்தின் (Palestinian Authority government) பத்தாவது பிரதமராக நியமிக்கப்பட்டார்

பிரதமர் பதவியும் நாடு கடத்தப்பட்ட நிகழ்வும்

பாலத்தீனத்தில் தேசிய அளவிலான தேர்தலில், பெரும்பாலான இடங்களில் ஹமாஸ் வெற்றி பெற்றதன் விளைவாக, அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அவரை பிரதமராக நியமித்தார். இருப்பினும் அடுத்த ஆண்டே, அவர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். காஸாவில் ஏற்பட்ட வன்முறையின் விளைவாக காஸா பகுதியில் இருந்து அப்பாஸின் ஃபதா கட்சி வெளியேற்றப்பட்ட பிறகு, ஹனியேவின் பிரதமர் பதவி பறிபோனது.

ஆனால் அவரின் பதவி பறிப்பானது, "அரசியல் சாசனத்திற்கு புறம்பானது," என்று வாதிட்டார் ஹனியே. அவரின் "அரசாங்கம் பாலத்தீன மக்களுக்கான அரசியல் பொறுப்புகளை ஒருபோதும் கைவிடாது," என்று கூறினார்.

ஹமாஸ் தலைவராக அவர் அறியப்பட்டாலும், பாலத்தீனத்தில் உள்ள இதர ஆயுதமேந்திய குழுக்களுடன் நல்ல உறவில் இருந்தவர் ஹனியே. யதார்த்தவாதியாக பலராலும் அறியப்பட்டவர்.

2017ம் ஆண்டு அவர் ஹமாஸின் அரசியல் பிரிவு தலைவராக செயல்பட்டார்.

2018ம் ஆண்டு, அமெரிக்க உள்துறை அமைச்சகம் ஹனியேவை பயங்கரவாதியாக அறிவித்தது. பாலத்தீனத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஹனியே கடந்த சில ஆண்டுகளாக கத்தாரிலும் துருக்கியிலுமாக மாறிமாறி வாழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

அவர் 2017 இல் ஹமாஸின் அரசியல் பிரிவு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்க வெளியுறவுத்துறை அவரை 2018 இல் பயங்கரவாதியாக அறிவித்தது.

காஸாவில் போர் நிறுத்த நடவடிக்கைகளுக்கான பேச்சுவார்த்தையில் இவர் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021