முச்சக்கரவண்டியில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் வௌியான தகவல் !

 

முச்சக்கரவண்டியில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் வௌியான தகவல் !


கொழும்பு, வார்ட் பிளேஸில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த நபரின் சடலம் ஒன்றை பொலிஸார் இன்று கண்டு பிடித்தனர்.

இன்று (23) அதிகாலை 1 மணியளவில் பொலிஸ் அவசர இலக்கமான 119 க்கு கிடைத்த தகவலின் படி, குருந்துவத்தை பொலிஸாரால் வார்ட் பிளேஸ் தேசிய பல் வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் இருந்து சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பின்னர் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினர் நடத்திய சோதனையில் மித்தெனிய பிரதேசத்தில் வசிப்பவருக்கு குறித்த முச்சக்கரவண்டி சொந்தமானது என தெரியவந்துள்ளது.

விசாரணையில், முச்சக்கரவண்டியை தனது மைத்துனருக்கு வாடகைக்கு செலுத்த கொடுத்ததாக குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், படுகொலை செய்யப்பட்டவர் கொடகவெல பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதான சமிந்த குமார என தெரியவந்துள்ளது.

பகலில் அலுமினியம் தொடர்பான வேலையில் ஈடுபட்டு வந்த அவர், இரவில் வாடகை முச்சக்கரவண்டி ஓட்டுநராக இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் அதுருகிரிய பிரதேசத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் கொலைசெய்யப்பட்ட நபரின் மார்பிலும் கழுத்திலும் இரண்டு காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், பின் இருக்கைக்கு அருகில் அவரது சடலம் கிடந்ததால் பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அதேபோல், முச்சக்கரவண்டியின் பக்கவாட்டு கண்ணாடி ஒன்றும் உடைந்து வீதியில் கிடந்துள்ளது.

எனினும் கொலை செய்யப்பட்ட நபர் மற்றும் கொலைக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை.

அதன்படி, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கெமராக்களை பொலிஸார் சோதனை செய்து வருகின்றனர்.

பின்னர் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கருவாத்தோட்டம் பொலிஸார் உட்பட பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021