கையடக்கத் தொலைபேசிகள், மின் உபகரணங்கள் விற்பனை செய்யும் கடைகளில் திருட்டு : தாயும் மகளும் கைது !
கையடக்கத் தொலைபேசிகள், மின் உபகரணங்கள் விற்பனை செய்யும் கடைகளில் திருட்டு : தாயும் மகளும் கைது !
மாத்தளை, கலேவெல பிரதேசத்தைச் சேர்ந்த தாயும் மகளுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் நேற்று (7) மாத்தளை, தம்புள்ளை நகரத்தில் உள்ள கையடக்கத் தொலைபேசிகள் விற்பனை செய்யும் கடையொன்றிற்குள் சென்று திருட முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் இருவரும் நீண்ட காலமாக இவ்வாறான திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Comments
Post a Comment