இரு குடும்பங்களுக்கு இடையில் பிரச்சினை: 36 வயது பெண் கொடூர கொ லை !

 

இரு குடும்பங்களுக்கு இடையில் பிரச்சினை: 36 வயது பெண் கொடூர கொ லை !


ஹொரணை பிரதேசத்தில் 3 பிள்ளைகளின் தாய் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

பிரதீபிகா குமாரி என்ற 36 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலைமை காரணமாக இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அயல் வீட்டிலுள்ள நபர் ஒருவர் தனது சகோதரனுடன், குறித்த பெண்ணை சந்திப்பதற்காக கத்தியுடன் சென்றுள்ளார்.

திடீரென அந்த நபர், குறித்த பெண்ணை கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளார்.

இந்த நிலையில் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ள நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் சந்தேக நபருக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபரின் மனைவி இன்னொருவருடன் சென்று வாழ்ந்து வரும் நிலையில், அதற்கு கொலை செய்யப்பட்ட பெண் உதவியதாக, சந்தேகநபர் குற்றம் சாட்டியுள்ளார்.

அதற்கு பழிவாங்கும் நோக்கிலேயே குறித்த பெண்ணை கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !