75 இலட்சம் ரூபா பெறுமதியான 650 கையடக்க தொலைபேசிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது !
75 இலட்சம் ரூபா பெறுமதியான 650 கையடக்க தொலைபேசிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது !
இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக கொண்டு சென்ற சுமார் 75 இலட்சம் ரூபா பெறுமதியான 650 கையடக்க தொலைபேசிகளுடன் சந்தேகநபர் ஒருவர் நுரைச்சோலை பொலிஸ் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கெக்கிராவ பிரதேசத்தில் வசிக்கும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலேரோ வகை கெப் வண்டியினால் இந்த கையடக்க தொலைபேசிகள் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று அதிகாலை கற்பிட்டியிலிருந்து கரம்ப கடற்படை பொலிஸ் வீதித்தடை ஊடாகச் சென்ற இந்த சந்தேகத்திற்கிடமான வாகனத்தை சோதனையிட்ட போது ஐந்து பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Comments
Post a Comment