பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான “சேதவத்தை கசுன்”இன் உதவியாளர்கள் இருவர் கைது !

 

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான “சேதவத்தை கசுன்”இன் உதவியாளர்கள் இருவர் கைது !



பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருமான “சேதவத்தை கசுன்” என்பவரின் உதவியாளர்கள் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கிராண்ட்பாஸ், சேதவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 04 தோட்டாக்கள் மற்றும் 21 கிராம் 500 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் இருவரும் பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருமான “சேதவத்தை கசுன்” என்பவருக்குச் சொந்தமான போதைப்பொருட்களை பல்வேறு பிரதேசங்களில் விற்பனை செய்து வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !