சட்டவிரோத மதுபானத்துடன் இளைஞன் கைது !

 

சட்டவிரோத மதுபானத்துடன் இளைஞன் கைது !


கம்பஹா, பல்லேவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுராகொட பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன், இளைஞன் ஒருவர் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளதாக பல்லேவெல பொலிஸார் தெரிவித்தனர்.

பல்லேவெல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுராகொட பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 101 லீற்றர் சட்டவிரோத மதுபானம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பல்லேவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !