தேர்தல் காரணமாக பஸ்களில் 99 வீதமான ஆசனங்கள் முன்பதிவு !

 

தேர்தல் காரணமாக பஸ்களில் 99 வீதமான ஆசனங்கள் முன்பதிவு !


நீண்ட வார விடுமுறை மற்றும் தேர்தல் காரணமாக, அரச மற்றும் தனியார் பஸ்களில் 99 வீதமான ஆசனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பஸ்கள் நிறுவனங்கள் பல பஸ்களிலும், இருக்கைகளை முன்பதிவு செய்து பயணிக்கும் விரைவுப் பஸ்களிலும் ஆசனங்கள் முன்பதிவு செய்யப்படுவதாகக் கூறுகின்றன.

நாளை 13 மற்றும் 20 ஆம் திகதிகளில் கொழும்பில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களில் அனைத்து ஆசனங்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதேபோல், 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் வெளி மாவட்டங்களில் இருந்து கொழும்பு வரும் பஸ்களில் தொண்ணூறு வீதமான ஆசனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். .

அத்துடன் இலங்கை போக்குவரத்து சபையின் பயணிக்கக்கூடிய பஸ்களில் மேற்படி நான்கு நாட்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் 23ஆம் திகதி வரை சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதால், 20, 22, 23 ஆகிய மூன்று நாட்களுக்கு அரச பஸ்களை வாடகைக்கு வழங்க வேண்டாம் என இலங்கை போக்குவரத்துச் சபைக்கு தேர்தல்கள் ஆணைக்குழு பணிப்புரை விடுத்துள்ளது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !