எரிபொருட்களின் கையிருப்புத் தொடர்பில் வெளியான தகவல் !

 

எரிபொருட்களின் கையிருப்புத் தொடர்பில் வெளியான தகவல் !


நாட்டில் உள்ள எரிபொருட்களின் இருப்புக்கள் தொடர்பில் முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர விளக்கமளித்துள்ளார்.

அவரது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் இது தொடர்பாக பதிவொன்றினை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, 1 இலட்சத்து 23,888 மெற்றிக் டொன் டீசலும், 13 ஆயிரத்து 627 மெற்றிக் டொன் சுப்பர் டீசலும் கையிருப்பாக உள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் 90,972 மெட்ரிக் டொன் ஒக்டேன் 92 வகை பெட்ரோலும், 18,729 மெட்ரிக் டொன் ஒக்டேன் 95 வகை பெட்ரோலும் உள்ளதாகவம் கஞ்சன விஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் 30,295 மெற்றிக் டொன் விமான எரிபொருள் இருப்பதாக காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இதேவேளை, தனது உத்தியோகபூர்வ அரச வாகனத்தையும் அமைச்சு அலுவலகத்தையும் நேற்று கையளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !