காட்டுப் பகுதியில், மீட்கப்பட்ட படகின் வெளி இணைப்பு இயந்திரம் !

 

காட்டுப் பகுதியில், மீட்கப்பட்ட படகின் வெளி இணைப்பு இயந்திரம் !


வடமராட்சி, வெற்றிலைக்கேணி காட்டுப் பகுதியில் படகின் வெளி இணைப்பு இயந்திரம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி காட்டுப் பகுதியில் நேற்று படகு ஒன்றின் வெளி இணைப்பு இயந்திரம் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

ஆழியவளையை சேர்ந்த நபர் ஒருவர் நாவல் பழம் பறிப்பதற்காக காட்டு பகுதிக்கு சென்ற வேளை, மணலில் புதையுண்ட நிலையில் 25 குதிரை வலு கொண்ட வெளி இணைப்பு இயந்திரத்தை கண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக ஆழியவளை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தலைவருக்கு தெரியப்படுத்தியதுடன் பொலிசாருக்கும் தெரியப்படுத்தியதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்று ஆழியவளை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினர் வெளி இணைப்பு இயந்திரத்தை மீட்டு, பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !