மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்த பாரிய மரம் வெட்டப்பட்டது !

 

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்த பாரிய மரம் வெட்டப்பட்டது !


மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்த பாரிய மரம் வீதி அபிவிருத்தி அதிகார சபையினரால் நேற்று மாலை வெட்டப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்திற்குட்பட்ட நாவற்குடா பிரதான வீதியில் பழமை வாய்ந்த குறித்த மரம் பிரதான வீதியில் முறிந்து விழும் நிலையில் காணப்பட்டதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மாவட்டத்தில் பருவமழை ஆரம்பிக்க இருப்பதால் குறித்த மரத்தின் கிளைகள் முறிந்து விழுந்து வீதியில் பயணிக்கின்ற வாகனங்கள் மீதும் மக்களின் மீதும் உயிர் ஆபத்துக்களை ஏற்படுத்தலாம். இதனால் பாரிய மரத்தின் கிளைகளை வெட்டுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு பொதுமக்கள் தெரிவித்ததை அடுத்தே குறித்த மரம் வெட்டப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !