10 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியான மூன்று மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் கைது !

 

10 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியான மூன்று மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் கைது !


நாட்டின் பல பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் ஒருவரை கஹதுட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கஹதுட்டுவ, மீரிகம, கட்டுநாயக்க ஆகிய பிரதேசங்களில் இருந்து 10 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியான மூன்று மோட்டார் சைக்கிள்களை சந்தேகநபர் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருடப்பட்டதாக தெரிவிக்கப்படும் 3 கையடக்கத் தொலைபேசிகளையும் சந்தேகநபரிடம் இருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், திருடிய மோட்டார் சைக்கிள்களை ஆடிஅம்பலம பகுதியில் இரண்டு இடங்களில் ஒன்றரை இலட்சம் ரூபாவிற்கு அடகு வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, அடகு வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களை பொலிஸ் காவலில் எடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள்களை அடகு வைத்து பெறப்பட்ட பணத்தை சந்தேக நபர், திருமணத்துக்கு அப்பாற்பட்ட பாலியல் உறவுக்காக பயன்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் படுவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடையவர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹதுட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !