இலங்கைக்கு கடத்தவிருந்த 330 கிலோ கஞ்சாவுடன் தமிழகத்தில் மூவர் கைது !
இலங்கைக்கு கடத்தவிருந்த 330 கிலோ கஞ்சாவுடன் தமிழகத்தில் மூவர் கைது !
ஆந்திராவில் இருந்து தஞ்சாவூர் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற மூவரை தஞ்சாவூர் பொலிஸார் வெள்ளிக்கிழமை (22) கைது செய்துள்ளனர்.
இதன்போது, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 படகுகளும், 330 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே முடச்சிக்காடு என்ற இடத்தில் கொள்கலன் லொறிக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சா தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
லொறியின் உரிமையாளர் அண்ணாதுரை, லொறியின் சாரதி உட்பட மூவர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அண்ணாதுரைக்கு சொந்தமான லொறி, கார் மற்றும் போதைப் பொருட்களை இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்திருந்த மூன்று ஃபைபர் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
Comments
Post a Comment