தேசிய பட்டியல் ஊடாக தனது நியமனம் சட்டபூர்வமானது, இந்த விடயம் ஒரு சிலருக்கு மாத்திரமே பிரச்சினை !
தேசிய பட்டியல் ஊடாக தனது நியமனம் சட்டபூர்வமானது, இந்த விடயம் ஒரு சிலருக்கு மாத்திரமே பிரச்சினை !
புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) தேசிய பட்டியல் நியமனமான முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வில் இன்று கலந்து கொண்டார்.
நாடாளுமன்றத்திற்கு வருகை தந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரவி கருணாநாயக்க, தேசிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் ஊடாக தனது நியமனம் சட்டபூர்வமானது என தெரிவித்தார்.
இந்த விடயம் ஒரு சிலருக்கு மாத்திரமே பிரச்சினை என்றும் முழு கட்சியினருக்கும் பிரச்சினை இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியை மீளக் கட்டியெழுப்புவதுடன், பலமான அரசியல் சக்தியாக அதனை சரியான பாதையில் வழிநடத்துவதே தமது கவனம் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
Comments
Post a Comment