“ஃபெஞ்சல்” புயலின் தாக்கம் காரணமாக காற்றின் தரம் குறைவடையலாம் - மத்திய சுற்றாடல் அதிகார சபை (CEA) எச்சரிக்கை !

 

“ஃபெஞ்சல்” புயலின் தாக்கம் காரணமாக காற்றின் தரம் குறைவடையலாம் - மத்திய சுற்றாடல் அதிகார சபை (CEA) எச்சரிக்கை !


தென்மேற்கு வங்காள விரிகுடாவில் “ஃபெஞ்சல்” புயலின் தாக்கம் காரணமாக நாட்டில் சில பகுதிகளில் இன்று சனிக்கிழமை (30) காற்றின் தரம் குறைவடையலாம் என மத்திய சுற்றாடல் அதிகார சபை (CEA) எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் சில பகுதிகளில் காற்றின் தரச் சுட்டெண் 92 - 120 வரை காணப்படலாம் என மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, குருணாகல், கண்டி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி, புத்தளம், பதுளை, திருகோணமலை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் காற்றின் தரம் குறைவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காற்றின் தரம் குறைவடைவதன் மூலம் வளிமண்டலத்தில் மாசு அதிகரிக்கக்கூடும். இதனால் காற்று மாசுபாடு ஏற்படும்.

காற்று மாசுபாடு ஏற்படுவதால் மனிதர்கள் மத்தியில் நோய்கள் அதிகரிக்கும் நிலை ஏற்படலாம். குறிப்பாக சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !