நெல் கொள்வனவிற்கு சலுகை வட்டி வீதத்தில் கடன் !

நெல் கொள்வனவிற்கு சலுகை வட்டி வீதத்தில் கடன் ! சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களுக்கு அரச வங்கிகள் ஊடாக சலுகை வட்டி வீதத்தில் அடகுக் கடன் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு... 05. இதற்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட நெற் கொள்வனவுக்கான அடகுக் கடன் முறை (Pledge loan Facility) 2024/2025 பெரும்போகத்திலிருந்து வருடாந்த வேலைத்திட்டமாக நடைமுறைப்படுத்தல் நெல் அறுவடைக்கான நியாயமான விலையை உறுதிப்படுத்தல் மற்றும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்களை பலப்படுத்தும் நோக்கில் சலுகை வட்டி வீதத்தில் அரச வங்கிகள் மூலமாக அடகுக் கடன் முறையொன்று சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்களுக்கு வழங்குவதற்காக 2023.08.14 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த போகங்களில் இவ்வேலைத்திட்டம் சிறந்த பெறுபேறுகளை அடைந்துள்ளமையை அவதானிக்கக் கூடியதாகவுள்ளமையால், 2024ஃ25 பெரும்போகம் தொடக்கம் ஒவ்வொரு போகத்திலும் இவ்வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது பொருத்தமானதெனக்...