அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் சமமான சலுகைகளை வழங்க வேண்டும் ; ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை !
அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் சமமான சலுகைகளை வழங்க வேண்டும் ; ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை !
.jpg)
பாடசாலை உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கு, தற்போதைய அரசாங்கம் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் சமமான சலுகைகளை வழங்க வேண்டுமென ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
அஸ்வெசும பயனாளிகளின் பிள்ளைகளுக்கும், அஸ்வெசும கொடுப்பனவு தேவையுடையோரின் பிள்ளைகளுக்கும் 6,000 ரூபா உதவித்தொகை வழங்குவதைப்போன்று, அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் அரசாங்கம் சலுகைகளை வழங்க வேண்டுமென அந்த சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
அதன்படி, அனைத்து மாணவர்களுக்கும் அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டுமென அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மாணவர் தொகைக்கேற்ப வரி குறைக்கப்பட்டு சலுகைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டதொரு குழுவிற்கு மாத்திரம் 6,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படுவது பாரிய பிரச்சினையாகும் என்றும் கூறியுள்ளார்இந்த சலுகைகள் அனைத்து மாணவர்களுக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும் என அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதேவேளை, அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையில் அறிவிக்கப்பட்டதற்கமைய, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்தைக் கல்விக்காக ஒதுக்க வேண்டுமென, புரட்சிகர மாணவர் ஒன்றியத்தின் செயற்குழு உறுப்பினர் மங்கள மத்துமகே தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment