மட்டக்களப்பில் இரவில் பஸ்ஸில் தனித்திருந்த 15 வயது சிறுமி : பொலிஸார் விசாரணை !

 

மட்டக்களப்பில் இரவில் பஸ்ஸில் தனித்திருந்த 15 வயது சிறுமி : பொலிஸார் விசாரணை !



மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னால் பொலன்னறுவை நோக்கி பயணிக்கக் காத்திருந்த தனியார் பஸ் வண்டியில் தனியாக சந்தேகத்துக்கு இடமான முறையில் இருந்த 15 வயது சிறுமியை செவ்வாய்க்கிழமை (28) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடியைச் சேர்ந்த சிறுமியே பஸ்ஸில் தனித்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாயார் வேலைவாய்ப்பு பெற்று வெளிநாட்டுக்குச் சென்ற பின்னர், தந்தையின் பராமரிப்பில் இருந்துவந்த இச்சிறுமி, நேற்றிரவு வீட்டை விட்டு வெளியேறி, கல்முனையில் இருந்து பொலன்னறுவைக்கு பயணிக்கும் தனியார் பஸ்ஸில் ஏறியுள்ளார்.

அந்த பஸ்ஸின் சாரதி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னால் பஸ்ஸை நிறுத்திவிட்டு, பஸ்ஸினுள் இருந்த நோயாளி ஒருவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அதன் பின்னர், பஸ்ஸில் தனியாக அமர்ந்திருந்த சிறுமியை அவதானித்த ஒருவர் சந்தேகம் கொண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

அதனையடுத்து, பொலிஸார் அந்த பஸ்ஸில் அமர்ந்திருந்த சிறுமியை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து, விசாரித்துள்ளனர்.

சிறுமி ஏற்கெனவே வீட்டை விட்டு வெளியேறி, பின்னர், சிறுவர் இல்லத்தில் அனுமதிக்கப்பட்டமையும், பின்னர், தந்தை தான் பராமரிப்பதாக பொறுப்பேற்று சிறுமியை அழைத்துச் சென்றமையும் விசாரணையின்போது தெரியவந்துள்ளது.

இவ்வாறு சிறுமி அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் ஈடுபட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, குறித்த சிறுமியை சிறுவர் இல்லத்தில் ஒப்படைப்பதற்காக நீதிமன்றத்தின் அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021