சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஜீப் வாகனத்துடன் மூவர் கைது !

 

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஜீப் வாகனத்துடன் மூவர் கைது !



சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஜீப் வாகனம் ஒன்றுடன் மூன்று சந்தேக நபர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளதாக வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் இரத்தினபுரி, அங்கம்மன பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்த ஜீப் வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் இரத்தினபுரி பிரதேசத்தில் வசிக்கும் 43, 45 மற்றும் 47 வயதுடையவர்கள் ஆவர்.

மேலும், சந்தேக நபர்களை இன்று புதன்கிழமை (29) இரத்தினபுரி நீதிமன்றில் ஆஜர்படுத்த வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !