குளவிக்கொட்டுக்கு இலக்கான பாடசாலை மாணவன் உயிரிழப்பு !
குளவிக்கொட்டுக்கு இலக்கான பாடசாலை மாணவன் உயிரிழப்பு !
கம்பளை - நுவரெலியா பிரதான வீதியில் அமைந்துள்ள வீடொன்றுக்கு அருகிலுள்ள மரமொன்றில் கட்டப்பட்ட குளவிக்கூட்டில் இருந்த குளவிகளின் தாக்குதலுக்கே இந்த 8 பேரும் இலக்காகியுள்ளனர்.
புஸல்லாவை பிளாக் பொரஸ்ட் பெருந்தோட்டத்தில் வசித்துவந்த, புஸல்லாவையில் உள்ள பிரபல பாடசாலையொன்றின் ஆரம்பப் பிரிவில் கல்வி கற்ற மாணவனே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவனின் தாய், தந்தை மற்றும் சகோதரர் உட்பட 8 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியதையடுத்து, அவர்களில் ஆறு பேர் கம்பளை, வஹுகபிட்டிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த மாணவன் தனது சகோதரருடன் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது குளவிக்கொட்டு தாக்குதல் இடம்பெற்றதையடுத்து, அயலவர்களின் உதவியுடன் குளவிகள் தீ வைத்து விரட்டப்பட்டன.
அதன் பின்னர், காயமடைந்தவர்களை சிலர் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.
அதனை தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். இதனையடுத்து, மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பேராதனை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
Comments
Post a Comment