மதுபோதையில் குளத்தில் பாய்ந்த நபரை காப்பாற்றிய பின்பும், அவர் மீண்டும் குளத்தில் குதித்து காணாமல்போன சம்பவம் !
மதுபோதையில் குளத்தில் பாய்ந்த நபரை காப்பாற்றிய பின்பும், அவர் மீண்டும் குளத்தில் குதித்து காணாமல்போன சம்பவம் !
இன்றைய தினம் (29) கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள ஆலயமொன்றின் தீர்த்தோற்சவ நிகழ்வின்போதே இந்த நபர் காணாமல்போயுள்ளார்.
பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய இளம் குடும்பஸ்தரே காணாமல் போயுள்ளார்.
மது போதையில் அப்பகுதிக்குச் சென்ற இந்த நபர் குளத்தில் பாய்ந்துள்ளார். சிலர் அவரை தூக்கி கரைக்கு கொண்டுசென்றதன் பின்னர், மீண்டும் அவர் குளத்தில் பாய்ந்துள்ளார்.
பல மணிநேரம் கடந்தும் அவர் மேலே வராத காரணத்தால், அங்கிருந்த இளைஞர்கள் அந்த நபரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Comments
Post a Comment