நாமல் ராஜபக்ஷவிடம் 5 மணிநேர வாக்குமூலம் பதிவு

 

நாமல் ராஜபக்ஷவிடம் 5 மணிநேர வாக்குமூலம் பதிவு


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வாக்குமூலம் வழங்கிய பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

2013 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் A-330 விமானங்கள் 6 மற்றும் A- 350 விமானங்கள் 8 ஆகியவற்றை கொள்வனவு செய்தமைக்கான எயார்பஸ் விமான ஒப்பந்தம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நாமல் ராஜபக்ஷ இன்று புதன்கிழமை (26) காலை 09.00 மணியளவில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார்.

இதன்போது, நாமல் ராஜபக்ஷவிடமிருந்து 5 மணிநேர வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குமூலம் வழங்கிய பின்னர் நாமல் ராஜபக்ஷ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !