கடும் வெப்பத்தால் ஏழாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

 

கடும் வெப்பத்தால் ஏழாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு



நாடு முழுவதும் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக 2,278 குடும்பங்களைச் சேர்ந்த 7,194 பேர் குடிநீரின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இரத்தினபுர மாவட்டத்தில் 1,885 குடும்பங்களைச் சேர்ந்த 5,776 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 393 குடும்பங்களைச் சேர்ந்த 1,418 பேரும் குடிநீரின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நிலையம் தெரிவித்துள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் மத்துகம மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் வெலிகேபெல மற்றும் எஹெலியகொட ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் இந்த நிலையை எதிர்கொண்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலைளத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு பாரவூர்தி மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !