களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அரச தாதியர் சங்கத்தினர் போராட்டம்

 

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அரச தாதியர் சங்கத்தினர் போராட்டம்


(SOPITHAN)


2025 வரவு செலவுத் திட்டத்தில் தன்னிச்சையாக கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாக இன்று (27) ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச தாதியர் சங்கம் தெரிவித்துள்ளதையடுத்து ,

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு எந்த வித பாதிப்பும் இன்றி தாம் எதிர்ப்பினை முன்னெடுத்ததை அவதானிக்க முடிந்தது.

இன்று நண்பகல் 12:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை மதிய உணவு வேளையில் போராட்டம் நடத்தப்படும் என சங்கத்தின் உப தலைவர் நாலக ஹெட்டியாராச்சி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் போராட்டம் வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, மேலதிக நேர வரம்பு பிரச்சினையை முன்வைத்து இன்று கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் சுகயீன விடுமுறையை அறிவிக்கும் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.





Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021