மாடுகளை திருடி லொறியில் கடத்திச் சென்ற சந்தேக நபர் கைது
மாடுகளை திருடி லொறியில் கடத்திச் சென்ற சந்தேக நபர் கைது

களுத்துறை - புலத்சிங்கள பகுதியில் மாடுகளை திருடி லொறியில் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புலத்சிங்கள பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் புலத்சிங்கள பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினர் நடத்திய சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் ஹல்வத்துர பகுதியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து லொறி ஒன்றை வாடகைக்கு எடுத்து திருடிய மாடுகளை கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட இரண்டு மாடுகளையும், வாடகைக்கு எடுக்கப்பட்ட லொறியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
திருடிய மாடுகளை பண்டாரகம, அட்டலுகம பகுதிக்கு கடத்திச் செல்ல சந்தேகநபர் திட்டமிட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
Comments
Post a Comment