மற்றுமொரு துப்பாக்கி சூட்டு சம்பவம் : காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதி

 

மற்றுமொரு துப்பாக்கி சூட்டு சம்பவம் : காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதி



மினுவங்கொடை, பத்தடுவன சந்தியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவரால் இன்று (26) காலை 11.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் 36 வயதுடைய ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூடு நடந்தபோது, ​​துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவரின் கால் மற்றும் கையில் காயங்கள் ஏற்பட்டு தற்போது கம்பஹா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

காயமடைந்த நபர் கெஹல்பத்தர பத்மேவின் பாடசாலை நண்பர் என்பதும் தெரியவந்துள்ளது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !