தொலைத்தொடர்பு கோபுரங்களில் மின்கலங்களை திருடிய கடற்படை சிப்பாய் உட்பட ஐவர் கைது !
தொலைத்தொடர்பு கோபுரங்களில் மின்கலங்களை திருடிய கடற்படை சிப்பாய் உட்பட ஐவர் கைது !
யாழ்ப்பாணத்திலுள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களில் மின்கலங்களை தொடர்ச்சியாக திருடி வந்த குற்றச்சாட்டில் முன்னாள் கடற்படை சிப்பாய் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, அவர்களுக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அம்பாறையில் பதுங்கியிருந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு வலையமைப்புகளின் கோபுரங்களுக்கு பொருத்தப்பட்டிருந்த மின்கலங்கள் தொடர்ச்சியாக திருடப்பட்டு வந்துள்ளன. இதுதொடர்பில், கோபுரங்கள் அமைந்துள்ள பகுதிகளின் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன.
இந்த முறைப்பாடுகளின் பிரகாரம் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் திருட்டுகளில் ஈடுபட்டு வந்தவர்களில் ஒருவர் முன்னாள் கடற்படை சிப்பாய் என்று அறிய வந்துள்ளது.
மற்றொருவர், அந்த மின்கலங்களை கொள்வனவு செய்தவர் என்றும் ஏனைய மூவரும் திருட்டுகளுக்கு உடந்தையாக இருந்தவர்கள் என்றும் தெரியவந்தது.
இவர்கள், யாழ்ப்பாணத்தில் மாத்திரம் 192 மின் கலங்களை களவாடியுள்ளனர். மின்கலம் ஒன்றின் பெறுமதி சுமார் ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Comments
Post a Comment