கல்வி உபகரணங்களை பெற்றுக் கொள்ளும் வவுச்சருக்கான செல்லுபடியாகும் காலம் நீடிப்பு !
கல்வி உபகரணங்களை பெற்றுக் கொள்ளும் வவுச்சருக்கான செல்லுபடியாகும் காலம் நீடிப்பு !
பாடசாலை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம் வழங்கி வரும் ரூ. 6,000 பெறுமதியான வவுச்சருக்கான செல்லுபடி காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பில் இன்று (28) கல்வியமைச்சு தெரிவிக்கையில்,
”அதற்கான காலத்தை ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே மாணவர்களுக்கான கல்வி உபகரணங்களை பெற்றுக் கொள்ளும் குறித்த வவுச்சர்களுக்கான செல்லுபடியாகும் கால எல்லை மார்ச் 31 ஆம் திகதி வரை மட்டுமே நிர்ணயிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாணவர்களின் நலன் கருதி இந்த கால நீடிப்பை மேற்கொண்டதாக” கல்வி யமைச்சு தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment