வியாழேந்திரன் கைதானமையை வெடி கொளுத்திக் கொண்டாடிய இளைஞர்கள் !

 

வியாழேந்திரன் கைதானமையை வெடி கொளுத்திக் கொண்டாடிய இளைஞர்கள் !



இலஞ்சம், ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் நேற்று வியாழேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்சம் பெற்றுக் கொள்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டு கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை ஏப்ரல் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்

இந்நிலையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணக்குழு கைது செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்ததையடுத்து ஒன்றினைந்த சில இளைஞர்கள் மட்டக்களப்பு நகர் மணிக்கூட்டு கோபுரத்து வீதி சுற்றுவட்டத்தில் நேற்று இரவு வெடி கொழுத்தி கொண்டாடினர்.

முன்னாள் அமைச்சர் கைது விவகாரத்தையடுத்து மாவட்டத்தில் மக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறிய நிலையில் சம்பவதினமான நேற்று இரவு மட்டக்களப்பு நகர் மணிக்கூட்டு கோபுரத்து வீதி சுற்றுவட்டத்தில் ஒன்றினைந்து வெடிகளை கொளுத்தி சந்தோசத்தை வெளிப்படுத்தியதையடுத்து அந்த பகுதி வெடி சத்தத்தினால் அதிர்ந்ததையடுத்து மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021