நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 361 பேர் கைது !

 

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 361 பேர் கைது !


நாடளாவிய ரீதியில் நேற்று புதன்கிழமை (23) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 361 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 111 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 167 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 82 பேரும், சட்டவிரோத சிகரட்டுகளுடன் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, 122 கிராம் 447 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 168 கிராம் 513 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 01 கிலோ 154 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 300 சட்டவிரோத சிகரட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021