கடல் வழியாகச் சட்டவிரோதமாகக் கடத்தப்படவிருந்த 8 கிலோ கிராம் தங்கத்துடன் இருவர் கைது !
கடல் வழியாகச் சட்டவிரோதமாகக் கடத்தப்படவிருந்த 8 கிலோ கிராம் தங்கத்துடன் இருவர் கைது !

தலைமன்னார் - உறுமலை கடற்கரைப் பகுதியில் கடல் வழியாகச் சட்டவிரோதமாகக் கடத்தப்படவிருந்த தங்கத்துடன் இரண்டு சந்தேக நபர்களைக் கடற்படை கைது செய்துள்ளது.
இதன்போது சட்டவிரோதமாக இந்தியாவுக்குக் கொண்டு செல்லத் தயாராக இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் 8 கிலோ 960 கிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளது.
கைதான சந்தேக நபர்கள் இருவரும் தலைமன்னார், உறுமலை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட தங்கம் மற்றும் படகுடன் சந்தேக நபர்கள் இருவரும் காங்கேசன்துறை சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment