வாடகை வீட்டில் கசிப்பு உற்பத்தி ; இருவர் கைது

 

வாடகை வீட்டில் கசிப்பு உற்பத்தி ; இருவர் கைது



கம்பஹா, பலகல்ல பிரதேசத்தில் உள்ள வாடகை வீடொன்றில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டதாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் திவுலப்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திவுலப்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மீரிகம பாதுராகொட பிரதேசத்தில் வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாரின் சோதனையில் குறித்த வாடகை வீட்டிலிருந்து கோடா (21 பீப்பாய்கள்) , கசிப்பு (400 போத்தல்கள்), எரிவாயு அடுப்பு மற்றும் சட்டவிரோத மதுபானம் (400 போத்தல்கள்) என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மினுவாங்கொடை நீதிமன்றில் இன்று புதன்கிழமை (30 ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திவுலப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !