வத்திக்கான் தூதரகத்திற்கு சென்ற எதிர்க்கட்சித் தலைவர்

 

வத்திக்கான் தூதரகத்திற்கு சென்ற எதிர்க்கட்சித் தலைவர்



எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (25) காலையில் வத்திக்கான் தூதரகத்திற்குச் சென்று மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களுக்கு தனது அனுதாபத்தைத் தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள வத்திக்கான் தூதரகத்திற்கு வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கையின் வத்திக்கான் அப்போஸ்தலிக்க தூதுவர் பேராயர் பிரயன் உடெய்க்வே அவர்களைச் சந்தித்து சிறிது நேரம் உரையாடியதைத் தொடர்ந்து தனது அனுதாபத்தைத் தெரிவித்தார்.

பின்னர், அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்தில் குறிப்பு எழுதி, பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவு குறித்து உலகெங்கிலும் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !