போலி ஆவணங்களை தயாரித்து காணி விற்பனை ; ஓய்வு பெற்ற பெண் பொலிஸ் அதிகாரி கைது

 

போலி ஆவணங்களை தயாரித்து காணி விற்பனை ; ஓய்வு பெற்ற பெண் பொலிஸ் அதிகாரி கைது


போலி ஆவணங்களை தயாரித்து 03 கோடி ரூபா பெறுமதியான காணி ஒன்றை விற்பனை செய்ததாக கூறப்படும் ஓய்வு பெற்ற பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் கம்பஹா - கிரிந்திவெல பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடைய ஓய்வு பெற்ற பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் ஆவார்.

சந்தேக நபரான ஓய்வு பெற்ற பெண் பொலிஸ் அதிகாரி நுகேகொடை நீதிமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை (29) ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் மே மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !