அமெரிக்க தீர்வை வரி பேச்சுவார்த்தை வெற்றி - ஜனாதிபதி !

 

அமெரிக்க தீர்வை வரி பேச்சுவார்த்தை வெற்றி - ஜனாதிபதி !


இலங்கை மீது அமெரிக்கா விதித்த 'உயர் தீர்வை வரியை' திருத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதால், இந்த விடயம் தொடர்பாக இரு தரப்பினரும் கூட்டு அறிக்கையை வெளியிட திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரியில் நேற்று (23) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

"பலர் எம்மிடம் கேட்கிறார்கள், நீங்கள் திருடாவிட்டாலும் அதனை செய்தவர்களுக்கு என்ன செய்ய போகிறீர்கள் என்று.

இது குறித்து இன்று காலையும் நான் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் பேசினேன். எங்கே சிக்கல் உள்ளது என்று.

எதிர்காலத்தில் பல வழக்குகள் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எனவே இந்த நிறுவனம் வலிமையாக உள்ளதை நாம் உணர்கிறோம்.

"மக்கள் எங்களுக்கு வாக்களித்து, சட்டத்தை மதிக்கும் நாட்டை எதிர்பார்த்திருந்தால், திசைகாட்டி அரசாங்கம் அந்த சூழ்நிலையை உருவாக்கியுள்ளது." என்றார்.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021