இராணுவ வீரரை ஏசிய பொலிஸ் அதிகாரிக்கு எதிராக விசாரணை

 

இராணுவ வீரரை ஏசிய பொலிஸ் அதிகாரிக்கு எதிராக விசாரணை


கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் புத்தரின் தந்த தாதுவை காட்சிப்படுத்தும் “ஸ்ரீ தலதா வழிபாடு” நிகழ்வுக்குச் செல்லும் வரிசைக்கு அருகில் நின்ற இராணுவ வீரர் ஒருவரை பொலிஸ் அதிகாரி ஏசுவது போன்று காண்பிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருவது குறித்து விசாரணை நடத்துமாறு பதில் பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த காணொளி பதில் பொலிஸ்மா அதிபர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கண்டி மாவட்டம் இலக்கம் 1க்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகருக்கு அவர் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையில் குற்றம் இழைத்துள்ளதாக கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி மீது கடும் ஒழுகாற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பதில் பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021