சூரிய மின் சக்தி கட்டமைப்புகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கான கட்டணத்தைக் குறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றில் மனு தாக்கல் !
சூரிய மின் சக்தி கட்டமைப்புகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கான கட்டணத்தைக் குறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றில் மனு தாக்கல் !

சூரிய மின் சக்தி கட்டமைப்புகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு செலுத்தப்படும் கட்டணத்தைக் குறைப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை எதிர்த்து, சூரிய மின் சக்தி உற்பத்தியாளர்கள் குழுவினால் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு மேல் நீதிமன்ற நீதிபதி கே. பிரியந்த பெர்னாண்டோ முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதிமன்றில் ஆஜரான மனுதாரர்கள் கூறியதாவது,
ஜூலை மாதம் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை மின்சார நிறுவனம் (LECO) ஆகியவை செலுத்தும் கட்டணத்தை அமைச்சரவை தன்னிச்சையாக குறைத்துள்ளது.
மின்சாரச் சட்டத்தின் கீழ், இவ்வாறான கட்டண மாற்றங்களுக்கு இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் (PUCSL) ஒப்புதல் அவசியம்.
ஆனால், மின்சார கட்டண மாற்றம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் இருந்து எந்த ஒப்புதலும் பெறப்படவில்லை.
இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டாம் என அறிவுறுத்தியிருந்த போதிலும், அரசாங்கம் அதைப் புறக்கணித்துள்ளது..
அமைச்சரவை தீர்மானத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு மின்சார கட்டண குறைப்பு நடைமுறைக்கு வருவது சட்டவிரோதமானது.
எனவே சூரிய மின் சக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கான கட்டணத்தை திருத்தியமைக்க அமைச்சரவை எடுத்துள்ள முடிவை இரத்து செய்யுமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர்.
இதனை கருத்தில் கொண்ட நீதவான் இந்த மனு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உத்தரவிட்டுள்ளார்.
Comments
Post a Comment