கிழக்கு மாகாணத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரிப்பு
கிழக்கு மாகாணத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரிப்பு
கிழக்கு மாகாணத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சம்பந்தப்பட்ட துஷ்பிரயோக வழக்குகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
2024ஆம் ஆண்டில் 304 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று டி.ஐ.ஜி. வருண ஜெயசுந்தர சுட்டிக்காட்டினார்.
ஒரு சம்பவம் நடந்த பின்னரே சுமார் 90% சிறுவர்கள் பாதுகாப்பற்றவர்களாகக் கண்டறியப்படுவதாக அவர் மேலும் கூறினார்.
அம்பாறை மாவட்டத்தில், மொத்தம் 101 குழந்தைகள் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.
இது பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகளில் குழந்தைகள் தொடர்ந்து சுரண்டப்படுவதை எடுத்துக்காட்டுகிறது.
பெரும்பாலான சம்பவங்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்படுவதில்லை என்று குறிப்பிட்ட டி.ஐ.ஜி ஜெயசுந்தர, பெற்றோர்கள் தங்கள் சிறுசர்களை பாதுகாப்பதில் அதிக பொறுப்பை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Sharp rise in reports of child abuse in Eastern Province, over 300 cases recorded
Comments
Post a Comment