மறு நுழைவு விசாவின் செல்லுபடிக் காலத்தை நீடித்தது இஸ்ரேல்

 

மறு நுழைவு விசாவின் செல்லுபடிக் காலத்தை நீடித்தது இஸ்ரேல்



இஸ்ரேலுக்குத் திரும்பும் எதிர்பார்ப்புடன் மறு நுழைவு விசாவில் இலங்கைக்கு வருகைதந்தோரின் மறு நுழைவு விசா செல்லுபடியாகும் காலத்தை எதிர்வரும் ஜுலை மாதம் 31 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு இஸ்ரேல் மக்கள் தொகை மற்றும் குடிவரவு அதிகாரசபை தீர்மானித்துள்ளது.

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் ஸ்திரமற்ற சூழ்நிலை காரணமாகவே இஸ்ரேல் மக்கள் தொகை மற்றும் குடிவரவு அதிகாரசபையினால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இஸ்ரேலில் இருந்து மறு நுழைவு விசாவில் இலங்கைக்கு வருகைதந்தவர்கள், மறு நுழைவு விசா காலாவதியான பின்னரும் எதிர்வரும் ஜுலை மாதம் 31 ஆம் திகதி வரையான நீடிக்கப்பட்ட காலப்பகுதியில் இஸ்ரேலுக்குத் திரும்புவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021